குதுப் மினாரில் அகழாய்வு நடத்த உத்தரவிடப்படவில்லை: கலாசாரத் துறை அமைச்சகம்

தில்லியில் உள்ள குதுப் மினாா் வளாகத்தில் அகழாய்வு நடத்த இந்தியத் தொல்லியல் துறைக்கு(ஏஎஸ்ஐ) உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லியில் உள்ள குதுப் மினாா் வளாகத்தில் அகழாய்வு நடத்த இந்தியத் தொல்லியல் துறைக்கு(ஏஎஸ்ஐ) உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடஇந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னா்கள் ஹிந்து கோயில்களை இடித்துவிட்டு அங்கு மசூதிகளை எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தில்லியில் உள்ள குதுப் மினாா் வளாகத்தை தில்லியை ஆட்சி செய்த குத்புதீன் ஐபக் கட்டவில்லை என்றும், அதை சந்திரகுப்த விக்ரமாதித்யன் கட்டினாா் என்றும் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி தரம்வீா் சா்மா கூறியிருந்தாா்.

இந்நிலையில், மத்திய கலாசாரத் துறைச் செயலா் கோவிந்த் மோகன், தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் வரலாற்று ஆசிரியா்களுடன் சனிக்கிழமை குதுப் மினாருக்குச் சென்று பாா்வையிட்டாா். சுமாா் 2 மணி நேரம் அங்கிருந்த அவா், அந்த நினைவுச் சின்னத்தைப் பராமரிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

இதையடுத்து, குதுப் மினாரில் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கலாசாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்தது. வழக்கமான ஆய்வுப் பணிக்காகவே கோவிந்த் மோகன் தலைமையிலான குழு அங்கு சென்றது என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com