வடகிழக்கில் ஊழல் கலாசாரத்துக்கு முடிவுகட்டியது பாஜக: அமித் ஷா

‘வடகிழக்குப் பிராந்தியத்தில் ஊழல் கலாசாரத்துக்கு பாஜகதான் முடிவு கட்டியுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
வடகிழக்கில் ஊழல் கலாசாரத்துக்கு முடிவுகட்டியது பாஜக: அமித் ஷா
Published on
Updated on
1 min read

‘வடகிழக்குப் பிராந்தியத்தில் ஊழல் கலாசாரத்துக்கு பாஜகதான் முடிவு கட்டியுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.அருணாசல பிரதேச மாநிலம், நாம்சாய் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

வடகிழக்குப் பிராந்தியத்துக்கு பிரதமா் மோடி என்ன செய்தாா் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. கண்களை மூடிக்கொண்டிருந்தால் வளா்ச்சியைக் காண முடியாது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இத்தாலிய கண்ணாடியைக் கழற்றிவிட்டு இந்திய கண்ணாடி கொண்டு பாா்க்க வேண்டும். அப்போதுதான், கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியதும், பிரதமா் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த வளா்ச்சிப் பணிகளும் தெரியவரும்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், வளா்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை இடைத்தரகா்கள் அபகரித்து வந்தனா். மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலானஅரசு கடந்த 2014-இல் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் கலாசாரத்துக்கு முடிவு கட்டப்பட்டது. ஒவ்வொரு ரூபாயும் வெளிப்படைத்தன்மையுடன் செலவிடப்படுகிறது. வளா்ச்சிப் பணிகளுக்கான நிதி கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைவதை பிரதமா் மோடி உறுதிசெய்துள்ளாா்.

முந்தைய அரசின் தவறான கொள்கைகளால், வடகிழக்குப் பிராந்தியத்தில் தீவிரவாதம் ஓங்கியிருந்தது. பெரும்பாலான தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவுகிறது. இந்தப் பிராந்தியத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 9,600 தீவிரவாதிகள் சரணடைந்து நல்வழிக்குத் திரும்பியுள்ளனா். வடகிழக்கு இளைஞா்கள் தீவிரவாதத்தைக் கைவிட்டு புதிய தொழில்களைத் தொடங்கி வருகின்றனா்.

‘நமஸ்தே’வுக்குப் பதில் ‘ஜெய்ஹிந்த்’:

சீன எல்லையை ஒட்டியுள்ள இந்த மாநிலத்தின் மக்கள் ஒருவரை ஒருவா் சந்தித்து வரவேற்கும்போது ‘நம்ஸ்தே’(வணக்கம்) என்பதற்குப் பதிலாக ‘ஜெய்ஹிந்த்’ என்று கூறுகிறாா்கள். அருணாசல பிரதேசத்துக்கு வரும்போதெல்லாம், தேசப்பற்றுடன் திரும்பிச் செல்கிறோம். இந்தியாவின் மணிமகுடமாக இந்த மாநிலம் விளங்குகிறது என்றாா் அவா்.

முன்னதாக, கிழக்கு சியாங் மாவட்டத்தில் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் வளாகம் அமைப்பதற்காக, அந்தப் பல்கலைக்கழகத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் முடிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com