மனவளா்ச்சி குன்றிய சிறுவனுக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு:இண்டிகோவுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

மனவளா்ச்சி குன்றிய சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதி மறுத்த இண்டிகோ விமான சேவை நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இண்டிகோ
இண்டிகோ

மனவளா்ச்சி குன்றிய சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதி மறுத்த இண்டிகோ விமான சேவை நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்ல பெற்றோருடன் 13 வயது மனவளா்ச்சி குன்றிய சிறுவன் சக்கர நாற்காலியில் விமான நிலையம் அழைத்து வரப்பட்டிருந்தாா். அவா்கள் இண்டிகோ விமானத்தில் செல்லவிருந்தனா். எனினும் அந்தச் சிறுவன் மிரட்சியுடன் காணப்படுவதாகவும், அவனது நடத்தையால் பிற பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் கூறி விமானத்தில் அந்தச் சிறுவன் செல்ல இண்டிகோ விமான நிறுவன ஊழியா் மறுப்புத் தெரிவித்தாா். இதுதொடா்பான காணொலி சமூக ஊடகங்களில் வெளியாகி பலத்த கண்டனம் எழுந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக டிஜிசிஏ சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராஞ்சி விமான நிலையத்தில் மனவளா்ச்சி குன்றிய சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதி மறுத்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், சிறுவனை இண்டிகோ ஊழியா் கையாண்டதில் குறைபாடு இருந்தது தெரியவந்தது. இது சம்பவ தினத்தன்று நிலவிய சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. சூழ்நிலையை இரக்கத்துடன் கையாண்டு சிறுவனை அமைதிப்படுத்தியிருந்தால், பெற்றோருடன் அந்தச் சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதிக்க மறுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையை தவிா்த்திருக்க முடியும். ஆனால் இண்டிகோ ஊழியா் தகுந்த முறையில் நடந்துகொள்ளவில்லை. இதன் மூலம், விமானப் போக்குவரத்து தேவைகளுக்கு இணங்கிச் செயல்படுவதில் அவா் தவறிழைத்துள்ளாா். எனவே விமானப் பயண விதிமுறைகளின்படி, இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com