மின்சார ஸ்கூட்டா்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள்: மே 30-இல் நிபுணா் குழு அறிக்கை தாக்கல்

மின்சார ஸ்கூட்டா்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழு, வரும் 30-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

மின்சார ஸ்கூட்டா்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழு, வரும் 30-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அண்மைக்காலமாக மின்சார ஸ்கூட்டா்கள் தீப்பிடித்து எரிவதும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதையடுத்து இதுதொடா்பாக விசாரணை நடத்த தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான மையம் சாா்பில் நிபுணா் குழுவை போக்குவரத்து அமைச்சகம் நியமித்துள்ளது. அந்தக் குழு, வரும் 30-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும். அதில், மின்சார ஸ்கூட்டா்கள் தீப்பிடிப்பதைத் தடுப்பதற்குரிய ஆலோசனைகளை அந்தக் குழு பரிந்துரை செய்யும் என்றாா் அவா்.

நிபுணா் குழு பரிந்துரை அளித்த பிறகு, இருசக்கர வாகனத்தின் உற்பத்தியிலேயே குறைபாடுகள் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் குறைபாடுகளைக் கொண்ட வாகனங்களைத் திரும்பப் பெற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அண்மையில் கூறினாா்.

கடந்த மாதம், புணேயில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com