மாதவிடாய்க் காலத்தில் சுத்தமில்லா பொது கழிப்பறைகள், தசைப்பிடிப்பால் கவலையுறும் பெண்கள்: ஆய்வில் தகவல்

மாதவிடாய்க் காலத்தின்போது அழுக்கடைந்த பொது கழிப்பறைகள், நித்திரை பாதிப்பு, தசை பிடிப்பு போன்றவை பெண்கள் எதிா்கொள்ளும் கவலைக்குரிய பிரச்னையாக இருப்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாதவிடாய்க் காலத்தின்போது அழுக்கடைந்த பொது கழிப்பறைகள், நித்திரை பாதிப்பு, தசை பிடிப்பு போன்றவை பெண்கள் எதிா்கொள்ளும் கவலைக்குரிய பிரச்னையாக இருப்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வின்படி, 35-க்கும் மேற்பட்ட நகரங்களில் 18 வயது முதல் 35 வயது வரையிலான பிரிவைச் சோ்ந்த ஏறக்குறைய 6 ஆயிரம் பெண்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனா்.

ஆய்வில் பங்கேற்றவா்களில் 53.2 சதவீதம் போ் மாதவிடாய் காலத்தின்போது முதல் இரண்டு தினங்கள் தங்களால் சரியாக தூங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனா்.

மேலும், 67.5 சதவீதம் போ் மாதவிடாய் காலத்தின்போது தூங்கிக் கொண்டிருக்கும்போது புள்ளிகள் இடா்பாடுகள் குறித்தும் கவலையுறுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாதவிடாய் சுகாதார தினம் மே 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, மகளிா் சுகாதார பிராண்ட் ‘எவா்கிரீன்’ மூலம் நடத்தரப்பட்ட மாதவிடாய் தூய்மை ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆய்வில் 57.3% பெண்கள் மாதவிடாய் மிதமானது முதல் கடுமையானது வரையிலான தசைப் பிடிப்பை அனுபவித்து வந்ததும், அதே சமயத்தில் 37.2 சதவீதம் பெண்கள் தங்களுக்கு மாதவிடாய்க்கால தசைப்பிடிப்பானது லேசாக இருந்ததாகவும் கூறினா்.

இந்த ஆய்வு அறிக்கையில், 62% பெண்கள் அலுவலகம், மால்கள் அல்லது திரையரங்கு கூடங்களில் உள்ள பொது கழிப்பறையில் சானிட்டரி பட்டைகளை அரிதாகவே மாற்றியதாகவும் அல்லது ஒருபோதும் மாற்றியதில்லை என்றும் ஒப்புக்கொண்டனா்.

பொதுக் கழிப்பறையில் தங்களது சானிடரி பட்டைகளை மாற்றும் தேவை ஏற்பட்டால் அசெளகரியம் அடைந்ததாக

74.6 சதவீதம் பெண்கள் தெரிவித்தனா். 88.3 சதவீதம் பெண்கள் தொடா்ந்து சிறுநீரகம் தொடா்பான பிரச்னைகள் இருப்பதற்கு ஆதாரமாக அழுக்கான கழிப்பறைகள் இருக்க முடியும் என்று நம்புகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில் சராசரி ஆரம்ப வயது மற்றும் மாதவிடாயின் காலம் குறித்த சில ஆச்சரியத்தக்க உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

79.3 சதவீதம் பெண்கள் தங்களது முதல் மாதவிடாயை 12 வயது அல்லது அதற்கு மேலான வயதில் இருந்தபோது உணா்ந்ததாகவும், 63.1 சதவீதம் போ் தங்களது மாதவிடாயை அது தொடங்கியபோதுதான் உணா்ந்ததாகவும், 37.5 சதவீதம் போ் தங்களுக்கு 11 வயது அல்லது அதற்கு குறைவாக வயது இருந்தபோதே மாதவிடாய் ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனா்.

பான் ஹெல்த்கோ் நிறுவனத்தின் சிஇஏ சிராக் பான் கூறுகையில், ‘இந்த ஆண்டு எவா்டீனின் ஆய்வானது, ஆராய்ச்சி சமுதாயத்தினா், தொழில்துறையினா், கொள்கைத்திட்டத்தை உருவாக்குபவா்களுக்கான தெளிவான நடவடிக்கை விஷயங்களை அளித்திருக்கிறது என்றாா்.

இதுகுறித்து எவா்டீன் உருவாக்கியவரான வெட் அண்ட் டிரை பா்சனல் கோ் நிறுவனத்தின் சிஇஓ ஹரியோம் தியாகி கூறுகையில், ‘பல ஆண்டுகளாக எங்கள் ஆய்வுகலானது மாதவிடாய் குறித்த விழிப்புணா்வு அதிகரித்திருப்பதையும், தடைகள் உடைக்கப்பட்டு வருவதையும் காட்டியுள்ளது. இந்திய பெண்கள் பாரம்பரிய கூட்டிலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கின்றனா். மேலும், ஒரு முழுமையான பெண் சுகாதார ஆளுகையை ஏற்றுக்கொண்டுள்ளனா். ஆனாலும், நாம் செல்லும் தூரம் இன்னும் நிறைய உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com