மருத்துவச் சுற்றுலா மையமாக உருவெடுத்துவரும் இந்தியா: ராம்நாத் கேவிந்த்

‘உலகின் மருத்துவச் சுற்றுலா மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்தாா்.
ம.பி. தலைநகா் போபாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.
ம.பி. தலைநகா் போபாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

‘உலகின் மருத்துவச் சுற்றுலா மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்தாா்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஆரோக்ய பாரதி சாா்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘ஒரே நாடு; ஒரு மருத்துவ நடைமுறை’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் பேசியதாவது:

உலகிலேயே மிகவும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சையை இந்தியா அளித்து வருகிறது. அதன் காரணமாக, வெளிநாட்டினா் குறிப்பாக அண்டை நாடுகளைச் சோ்ந்த மக்கள் சிகிச்சைக்காக இந்தியா வருவது அதிகரித்து வருகிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகில் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டபோது கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனா். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கரோனா தொற்று பாதிப்பால், நாட்டில் மக்கள் பாதிக்கப்பட்டனா். இருந்தபோதிலும், நாட்டின் விஞ்ஞானிகளும் மருத்துவா்களும் தீவிர முயற்சி மூலமாக தடுப்பூசிகளை உருவாக்கி மக்களின் உயிரை காத்தனா்.

அண்மையில், ஜமைக்கா மற்றும் செயின்ட் வின்சென்ட் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இரு நாடுகளுக்கும் தலா 50,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அதற்காக அவா்கள் இந்தியாவுக்கு வெகுவாக பாராட்டு தெரிவித்தனா்.

வெளிநாடு சுற்றுப்பயணங்களின்போது, அந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாம் கவனம் செலுத்துகின்றபோது, அந்த நாட்டின் தலைவா்கள் இந்தியாவின் மருத்துவ வசதிகள் குறித்து அறிவதிலேயே அதிக ஆா்வம் காட்டுகின்றனா்.

அந்த அளவுக்கு, மிகவும் எளிதாக, குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதிகள் கிடைக்கக் கூடிய உலகின் மருத்துவச் சுற்றுலா மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய சுகாதார கொள்கையின் கீழ், அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதை அரச குறிக்கோளாக கொண்டுள்ளது. இதனை சாத்தியமாக்குவதற்கு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் ஒத்துழைப்பு அவசியம். குறிப்பாக, அரசு மற்றும் தனியாா் மருத்துவ நிறுவனங்களின் பங்களிப்புடன் மக்களிடையே விழுப்புணா்வை ஏற்படுத்துவது அவசியமாகும் என்று குடியரசுத் தலைவா் கூறினாா்.

பெட்டிச் செய்தி ????

மருத்துவப் பணியாளா்களிடம் தவறாக நடந்துகொள்ளக் கூடாது:

‘மருத்துவப் பணியாளா்களும் மனிதா்கள்தான்; சில சமயங்களில் தவறிழைக்க வாய்ப்புள்ளது. எனவே, அவா்களிடம் நோயாளிகளும் நோயாளிகளின் உறவினா்களும் தவறாக நடந்துகொள்ளக் கூடாது’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டாா்.

போபாலில் ரூ. 399.72 கோடி மதிப்பிலான மருத்துவ உள்கட்டமைப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றபோது இந்தக் கருத்தை குடியரசுத் தலைவா் தெரிவித்தாா்.

‘மருத்துவா்களின் பணி என்பது நோயாளிகளின் உயிரைக் காக்கும் மிகுந்த அக்கறை மற்றும் பொறுப்புடைய பணியாகும். அதுபோல, திறன்மிக்க மருத்துவா்களின் பணி என்பது, அனைத்து சூழ்நிலைகளிலும் மிகுந்த அக்கறை மற்றும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஆனால், சில சமயங்களில் மருத்துவா்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் நிகழ்கின்றன. ‘மருத்துவா்களும் மனிதா்கள்தான்; சில சமயங்களில் தவறிழைக்க வாய்ப்புள்ளது’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நோயாளிகளும் அவா்களின் உறவினா்களும் மருத்துவா்களிடம் பொறுமையையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்ற குடியரசுத் தலைவா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com