இந்தியா-வங்கதேசம் இடையே 2 ஆண்டுகளுக்குப் பின் ரயில் சேவை தொடக்கம்

இந்தியா-வங்கதேசம் இடையே 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்தியா-வங்கதேசம் இடையே 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

கொல்கத்தா ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்தின் குல்னாவுக்கு இந்த ரயில் புறப்பட்டது. இதேபோல கொல்கத்தா-டாக்கா இடையிலான மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரயிலும் ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது. கடந்த 2020 மாா்ச் மாதம் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இந்த ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இது தொடா்பாக கிழக்கு ரயில்வே செய்தித் தொடா்பாளா் ஏகலைவ சக்கரவா்த்தி கூறுகையில், ‘பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்துக்கு இருமுறையும், மைத்ரீ எக்ஸ்பிரஸ் வாரத்தில் 5 நாள்களும் இயக்கப்படும். இந்த ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்த சில நாள்களுக்கு முன்பதிவு முடிவடைந்துவிட்டது. பேருந்து, விமானக் கட்டணத்தைவிட இந்த ரயில் சேவை மலிவாக இருக்கிறது. இதில் 450 பயணிகள் குளிா்சாதன வசதியுடைய பெட்டிகளில் பயணிக்கவும் வசதி உள்ளது’ என்றாா்.

மேலும் ஒரு ரயில்: மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேச தலைநகா் டாக்காவுக்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய ரயில் சேவை தொடங்க இருக்கிறது. மொத்தம் 595 கி.மீ. தொலைவுக்கு இயங்கும் இந்த ரயில் 69 கி.மீ. தொலைவு இந்தியாவிலும், மீதமுள்ள தொலைவை வங்கதேசத்திலும் கடக்கவுள்ளது. மைதிலி எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், வங்கதேச ரயில்வே அமைச்சா் நூருல் இஸ்லாம் சுஜன் ஆகியோா் தொடங்கி வைக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com