சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18 இல் கிளாட் நுழைவுத் தேர்வு!

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18 ஆம் தேதி கிளாட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18 ஆம் தேதி கிளாட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தலைவர் பூனம் சக்ஸேனா தெரிவித்துள்ளதாவது: 

நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் Common Law Admission Test (CLAT) எனும்  பொது சட்ட நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அதன்படி, அடுத்த கல்வி ஆண்டு (2023-24) மாணவர் சேர்க்கைக்கான கிளாட் தேர்வு வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 

இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் 
https://consortiumofnlus.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ. 4 ஆயிரம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.3,500 செலுத்த வேண்டும். 

மொத்த ம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு https://consortiumofnlus.ac.in இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com