குஜராத் தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்த பாரதிய பழங்குடியினர் கட்சி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல் கட்டமாக 12 வேட்பாளர்களை பாரதிய பழங்குடியினர் கட்சி அறிவித்துள்ளது.
குஜராத் தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்த பாரதிய பழங்குடியினர் கட்சி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல் கட்டமாக 12 வேட்பாளர்களை பாரதிய பழங்குடியினர் கட்சி அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 12 வேட்பாளர்களில் 9 பேர் பட்டியலின பழங்குடியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக வருகிற டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், பாரதிய பழங்குடியின கட்சி குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. 

இது குறித்து குஜராத்தின் பாரதிய பழங்குடியின கட்சியின் மாநிலத் தலைவர் ரமேஷ் வசவா கூறியதாவது: அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் பட்டியலின பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளிலும் பாரதிய பழங்குடியின கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் பாரதிய பழங்குடியின கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இன்று முதல் கட்டமாக பாரதிய பழங்குடியின கட்சி சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் பொதுத் தொகுதியிலும், 9 பேர் பட்டியலின பழங்குடியைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியிலும் போட்டியிட உள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com