ஜம்முவில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் ஜிரி மேளா!

ஜம்முவில் கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜிரி மேளா இந்தாண்டு நடத்தப்படுகிறது. 
ஜம்முவில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் ஜிரி மேளா!

ஜம்முவில் கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜிரி மேளா இந்தாண்டு நடத்தப்படுகிறது. 

இந்த திருவிழாவானது 500 ஆண்டுகளுக்கு முன்னர் நிலப்பிரபுக்களின் அடக்குமுறைத்தனமான கோரிக்கைகளை எதிர்த்துப் போராடி உயிர்த்தியாகம் செய்த விவசாயியான பாபா ஜித்துவின் தியாகத்தை நினைவு கூறுவதற்காகக் கொண்டாடப்படுகிறது. 

மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுற்றுலா இயக்குனரகம் இணைந்து நடத்தும் ஜிரி மேளா இந்தாண்டு நவம்பர் 7(இன்று) முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

ஒவ்வொரு வருடமும்  கார்த்திகை பூர்ணிமாவின் போது ஜிரி கிராமத்தில் உள்ள பாபா ஜித்துவின் ஆசீர்வாதம் பெறுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருகை தருவதுண்டு. 

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 

 2 வருடத்திற்குப் பின்பு நடைபெறும் ஜிரி மேளாவிற்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

விவசாயிகள் பெரும்பாலும் மேளாவுக்கு வருவதால், அவர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு தெரிவிக்க சிறப்பு விழிப்புணர்வு ஸ்டால்களையும் அரசு அமைத்துள்ளது. 

இந்த நிகழ்வை குடிமக்களிடையே அணுகக்கூடிய வகையில் பிராந்தியத்தின் விளையாட்டு மற்றும் கலாசார செழுமையை மேம்படுத்துவதே மேளாவின் முக்கிய அம்சமாகும் என்றார். 

இந்தாண்டு நடைபெறும் ஜிரி மேளாவில் ஜம்மு பகுதியில் இருந்தும், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயிலில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள இயற்கை குளமான பாபா-தா-தலாப்பில் பக்தர்கள் வழக்கமாக நீராடுகின்றனர். இந்த குளம் நோய் தீர்க்கும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com