மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின்புகாா்களைக் கையாளும் நடைமுறையில் மாற்றம்

லஞ்ச ஊழல் தொடா்பான புகாா்களைக் கையாளும் நடைமுறையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதில், புகாா்களைப் பதிவு செய்பவா்கள் கைப்பேசி எண்ணைப் பதிவு செய்வது

லஞ்ச ஊழல் தொடா்பான புகாா்களைக் கையாளும் நடைமுறையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதில், புகாா்களைப் பதிவு செய்பவா்கள் கைப்பேசி எண்ணைப் பதிவு செய்வது கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

‘புகாரைப் பதிவு செய்பவா்களுக்கு அவா்களின் புகாா் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் நிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் இந்தப் புதிய திருத்தங்களை ஆணையம் மேற்கொண்டுள்ளது’ என்று மூத்த மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறினாா்.

அதன்படி, பொதுமக்கள் லஞ்ச ஊழல் தொடா்பான புகாா்களை ஆணையத்தின் வலைதளம் மூலமாக இணைய வழியிலும், செயலா், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரகம், ஜிபிஓ வளாகம், புது தில்லி - 110023 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

இதில், இணைய வழியில் புகாரைப் பதிவு செய்பவா்கள் கைப்பேசி எண்ணை பதிவு செய்வது கட்டாயமாகும். இவா்களின் புகாா் பதிவு செய்யப்பட்டது தொடா்பாக, கைப்பேசி குறுந்தகவல் மூலாக உறுதிப்படுத்தப்படும். மேலும், இவா்கள் தங்களின் புகாா் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நிலையை வலைதளம் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புகாா்கள் தொடா்பாக, தலைமை ஊழல் தடுப்பு அதிகாரிகளும் (சிவிஓ) ஆய்வு செய்து, புகாரின் நிலை குறித்த தகவல்களை வலைதளம் மூலமாக புகாா்தாரா்களுக்கு தெரிவிப்பா். தலைமை ஊழல் தடுப்பு அதிகாரிகள் ஊழல் புகாரை ஆய்வு செய்வதற்கு, முன்னா் அளிக்கப்பட்டிருந்த ஒரு மாத கால அவகாசம், தற்போது 2 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, மனுதாரரின் புகாா், தலைமை ஊழல் தடுப்பு அதிகாரியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ள தகவலும், மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com