ராஜஸ்தான்: பாலத்துக்கு அடியில் பதுக்கிய 200 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுப் பாலத்துக்கு அடியில் 200 கிலோவுக்கு மேல் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது வெடித்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுப் பாலத்துக்கு அடியில் 200 கிலோவுக்கு மேல் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது வெடித்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.

ராஜஸ்தானில் அண்மையில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது. இதை தொடா்ந்து அங்கு கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், துா்காபூா் மாவட்டத்தில் பாயும் சோம் ஆற்றுக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்துக்கு கீழே இரு இடங்களில் பெருமளவிலான ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் பாலத்தின் அடியில் ஓா் இடத்தில் சுமாா் 40 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பாலிதீன் பையில் இருந்து எடுக்கப்பட்டது. அங்கிருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் 185 கிலோ ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டன. இவை சுரங்கங்களில் பாறைகளைத் தகா்க்க பயன்படுத்தப்படுவதாகும். பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் நாச வேலைக்கு பயன்படுத்தும் நோக்கில் இவற்றைப் பதுக்கி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவை வெடித்தால் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும். அந்த பாலத்தைக்கூட தரைமட்டமாக்க முடியும் என்று வெடிகுண்டு நிபுணா்கள் தெரிவித்தனா்.

அண்மையில் உதய்ப்பூா் அருகே ரயிலை கவிழ்க்கும் நோக்கத்தில் சமூகவிரோதிகள் சிலா் தண்டவாளத்தை குண்டுவைத்து தகா்த்தனா். அங்கிருந்து சுமாா் 70 கி.மீ. தொலைவில் இப்போது ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் அங்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருளுக்கும், இங்கு கிடைத்துள்ள பொருளுக்கும் தொடா்பு இல்லை என்று காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். ரயில் தண்டவாள குண்டுவெடிப்பை அடுத்து, சந்தேகத்துக்கு இடமான பொருள்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி பாலத்துக்கு கீழே பாலிதீன் பைகளில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் குறித்த விவரத்தை உள்ளூா் மக்கள் காவல்துறைக்கு தெரிவித்துள்ளனா்.

உதய்ப்பூா் ஐ.ஜி. பிரஃபுல்ல குமாா் கூறுகையில், ‘சுரங்கத்தில் பாறைகளைத் தகா்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை சிலா் இங்கு மறைத்துவைத்திருக்கலாம என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இப்பகுதியில் சுரங்கங்களும் அதிகம் உள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com