அருணாசல் விமான நிலையம் எதிர்க்கட்சிகளுக்கான அடி! பிரதமர் மோடி

அருணாசலப் பிரதேசத்தின் விமான நிலையம் திறக்கப்பட்டது எதிர்க்கட்சிகளின் கன்னத்தில் அறைந்ததைப் போன்று உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
நரேந்திர மோடி
நரேந்திர மோடி

அருணாசலப் பிரதேசத்தின் விமான நிலையம் திறக்கப்பட்டது எதிர்க்கட்சிகளின் கன்னத்தில் அறைந்ததைப் போன்று உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

அருணாசலப் பிரதேச தலைநகர் இட்டா நகரில் அமைக்கப்பட்ட முதல் பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.19) திறந்து வைத்தார். 

அப்போது பேசிய பிரதமர் மோடி, 2019ஆம் ஆண்டு இட்டா நகர் விமான நிலைய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும்போது அதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அருணாசல் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டு அடிக்கல் நாட்டுவதாகவும், அருணாசலில் விமான நிலையம் அமையாது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

தற்போது அவர்களின் (எதிர்க்கட்சிகள்) கூற்று தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று அருணாசலில் விமான நிலையம் திறக்கப்பட்டது எதிர்க்கட்சிகளின் கன்னத்தில் அறைந்ததைப்போன்று உள்ளது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

அருணாசலில் திறக்கப்பட்ட முதல் பசுமை விமான நிலையம், ரூ.640 கோடி செலவில் 690 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com