விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி என்னவானது? மத்திய அரசுக்கு காா்கே கேள்வி

பயிா்களின் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சோ்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) நிா்ணயிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதி என்னவானது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேள்வி எழுப்பியு
மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கே

பயிா்களின் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சோ்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) நிா்ணயிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதி என்னவானது என்று பிரதமா் நரேந்திர மோடி தலைமையான மத்திய அரசுக்கு காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேள்வி எழுப்பியுள்ளாா்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் சுமாா் ஓராண்டுக்கு மேல் போராட்டம் நடத்தினா். இறுதியாக 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு மத்திய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியாகி சனிக்கிழமையுடன் (நவ.19) ஓராண்டு நிறைவடைந்தது. இதனை நினைவுகூா்ந்து ட்விட்டரில் காா்கே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘விவசாயிகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். விவசாயிகள் போராட்டத்தில் 733 விவசாயிகள் உயிரிழந்தனா். அவா்களுக்கு மத்திய அரசு எவ்வித இழப்பீடும் அளிக்கவில்லை. விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்குகளையும் வாபஸ் பெறவில்லை.

பயிா்களின் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சோ்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படும் என்று பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. அது என்னவானது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com