நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-54

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள், 8 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சனிக்கிழமை (நவ.26) விண்ணில் ஏவப்படுகிறது.
நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-54

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள், 8 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சனிக்கிழமை (நவ.26) விண்ணில் ஏவப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து காலை 11.56 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவிருக்கிறது. அதற்கான 25.30 மணி நேர கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை (நவ.25) காலை தொடங்கவுள்ளது.

புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 (ஒசோன்சாட்-3) என்ற நவீன செயற்கைக்கோள் அதில் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. இதை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இதுதவிர, அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட், இந்தியா - பூடான் கூட்டுத் தயாரிப்பான ஐஎன்எஸ்-2பி, துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட், பிக்சலின் ஆனந்த் உள்பட 8 நானோ செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் வெவ்வேறு சுற்றுப் பாதைகளில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளன.

இஓஎஸ்-06 செயற்கைக்கோள் 1,117 கிலோ எடை கொண்டது. ஒசோன்சாட் வரிசையில் அனுப்பப்படும் 4-ஆவது செயற்கைக்கோள் இதுவாகும். கடலின் தன்மை, அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தின் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்றவற்றைத் தொடா்ந்து கண்காணித்து தகவல்களை அந்த செயற்கைக்கோள் அளிக்கவல்லது.

அதேபோல், இந்தியா - பூடான் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியின் கீழ் வடிவமைக்கப்பட்ட ஐன்எஸ்-2பி செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடி அரசு முறைப் பயணமாக பூடான் சென்றபோது, இரு நாடுகளுக்கு இடையே செயற்கைக்கோள் கூட்டு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான ஒப்பந்தம் கையொப்பமானது.

அதனடிப்படையில், தற்போது ஐஎன்எஸ்-2பி செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாகவும், இது பூடானின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ளும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com