1,000 இளம் பொறியாளர்களைப் பணியமர்த்த சாங்சங் திட்டம்!

சாம்சங் இந்தியா நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்காக சுமார் 1,000 பொறியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
1,000 இளம் பொறியாளர்களைப் பணியமர்த்த சாங்சங் திட்டம்!

சாம்சங் இந்தியா நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்காக சுமார் 1,000 பொறியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, 2023ல் தேர்ந்தெடுக்கப்படும் இளம் பொறியாளர்கள் சாம்சங் செமிகண்டக்டர் இந்தியா ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைவார்கள் என நம்புகிறோம். இவர்கள் பெங்களூரு, நொய்டா, தில்லியில் உள்ள அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் பணியாற்றுவார்கள்.

புதுமை மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தில் தங்கள் கவனத்தை வலுப்படுத்தியுள்ள சாம்சங், இந்தியாவின் உயர்மட்ட பொறியியல் நிறுவனங்களில் இருந்து திறமையாளர்களை பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையால், டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்துவதற்கான எங்கள் பார்வை அதிகரிக்கும் என்றார் சாம்சங் இந்தியாவின் மனிதவளத் தலைவர் சமீர் வாத்வான்.

கொரிய எலெக்ட்ரானிக்ஸ் மேஜரான சாம்சங் நிறுவனம், கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், கணினி பார்வை, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் போன்ற பல பிரிவுகளில் இருந்து பொறியாளர்களை நியமிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com