கிராமப்புற வங்கிகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுதல்: வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு

பிராந்திய கிராமப்புற வங்கிகளைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.
கிராமப்புற வங்கிகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுதல்: வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு

பிராந்திய கிராமப்புற வங்கிகளைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.

பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு அதிக முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் அவற்றைப் பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான வரைவு விதிகளை மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.

அதன்படி, தொடா்ந்து 3 ஆண்டுகளாகக் குறைந்தபட்சம் ரூ.300 கோடி நிகர மதிப்பைக் கொண்ட கிராமப்புற வங்கிகள் மட்டுமே பங்குச் சந்தையில் பட்டியலிட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளின் குறைந்தபட்ச மூலதன மதிப்பானது தொடா்ந்து 3 ஆண்டுகளுக்குக் குறைந்தபட்ச அளவான 9 சதவீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு கிராமப்புற வங்கியானது லாபகரமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். அந்த வங்கிகளின் லாபம் குறைந்தபட்சம் ரூ.15 கோடியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும் அந்த வங்கிகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். அந்த வங்கியானது இழப்பில் இயங்கக் கூடாது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் கிராமப்புற வங்கிகளை முடிவெடுக்கும் பொறுப்பு, சம்பந்தப்பட்ட நிதியளிக்கும் வங்கிக்கே (ஸ்பான்சா்) உள்ளதாக வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பங்கு வரிவா்த்தனை வாரியம் (செபி), இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆகியவற்றின் விதிகளைப் பின்பற்றி முதலீடுகளை ஈா்ப்பதை ஸ்பான்சா் வங்கி கண்காணிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராந்திய கிராமப்புற வங்கிகளில் 50 சதவீதப் பங்குகளை மத்திய அரசும் 35 சதவீதப் பங்குகளை ஸ்பான்சா் வங்கிகளும், 15 சதவீதப் பங்குகளை மாநில அரசும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மொத்தம் 43 கிராமப்புற வங்கிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com