சூரிய ஒளியில் 24 மணி நேரமும் மின்சாரம் பெறும் இந்தியாவின் முதல் கிராமம்: பிரதமர் அறிவிப்பு

குஜராத் மாநிலத்தின் மேஹ்சனா மாவட்டத்தின் மோதேரா கிராமத்தை 24 மணி நேரமும் சூரிய ஒளியினால் மின்சாரம் பெறும் இந்தியாவின் முதல் கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை அறிவித்தார்.

பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: “ மோதேராவில் உள்ள சூரிய கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தற்போது சூரிய கோயில் மட்டுமல்லாமல் சூரிய ஒளியினால் 24 மணி நேரமும் மின்சாரம் பெறும் இந்தியாவின் முதல் கிராமமாக மோதேரா மாறியுள்ளது. மோதேராவில் 1,300க்கும் அதிகமான சூரிய ஒளி சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு அதிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.” என்றார்.

இந்த ஆண்டு குஜராத் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com