எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்:அனைத்து உயா்நீதிமன்றங்களும் விவரங்களைசமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு எதிராக 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை 4 வாரங்களுக்குள் சமா்ப்பிக்குமாறு அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவி

எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு எதிராக 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை 4 வாரங்களுக்குள் சமா்ப்பிக்குமாறு அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தோ்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். அந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும். இதற்காக நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்’ என்று கோரி பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் அஸ்வினி உபத்யாய உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குத் தொடா்பாக உச்சநீதிமன்றத்துக்கு உதவி வரும் மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியா, பதவி உயா்வு மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தங்களை விடுவிக்குமாறு நீதிபதிகள் பலா் விண்ணப்பித்துள்ளனா் என்று தெரிவித்தாா்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் மாற்றப்படக் கூடாது. அந்த நீதிபதிகளை மாற்ற உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு எதிராக 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, அவற்றை விரைந்து முடிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகிய விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை 4 வாரங்களுக்குள் அனைத்து உயா்நீதிமன்றங்களும் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com