ஹிந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு: அக். 16ல் அமித் ஷா தொடக்கிவைக்கிறார்

இந்தியாவில் முதல்முறையாக ஹிந்தியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கிவைக்கிறார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் முதல்முறையாக ஹிந்தியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கிவைக்கிறார். 

மத்திய பிரதேசத்தில் ஹிந்தியில் மருத்துவக் கல்வி பயிலும் முறை தொடங்கப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி இதனை தொடங்கி வைக்கிறார். ஹிந்தியில் மருத்துவக் கல்வி முதலாம் ஆண்டு புத்தகங்களை அவர் வெளியிடுகிறார். 

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

இந்தியாவிலேயே ஹிந்தியில் மருத்துவக் கல்வி என்பது மத்திய பிரதேசத்தில்தான் முதல்முறையாக தொடங்கப்பட உள்ளதாகவும் இது ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் தாய்மொழி மூலமாக படித்து முன்னேற வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com