தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நக்சல் தொடர்பு வழக்கு: முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா விடுவிப்பு

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிலிருந்ததாகக் கைது செய்யப்பட்ட தில்லி பல்கலை. பேராசிரியர்  ஜி.என்.சாய்பாபா அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

News image

ஜி.என்.சாய்பாபா

Updated On :14 அக்டோபர் 2022, 10:45 am

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிலிருந்ததாகக் கைது செய்யப்பட்ட தில்லி பல்கலை. பேராசிரியர்  ஜி.என்.சாய்பாபா அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மாவோயிஸ்ட் தலைவரான முப்பல்ல லஷ்மண ராவ் உடன் தொடர்ந்து தகவல்களை பரிமாற்றம் செய்ததாக  குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா கடந்த 2014-ம் ஆண்டு மே-மாதம் ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் ஹேம் மிஸ்ராவைக் கைது செய்து விசாரித்தபோது சாய்பாபாவுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தான் தூது சென்றதாகக் கூறியிருந்தார்.

2015-ல் நாக்பூர் சிறையில் ஜி.என்.சாய்பாபா

2015-ல் நாக்பூர் சிறையில் ஜி.என்.சாய்பாபா

வழக்கு விசாரணையில் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை வழக்கப்பட்டு நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 90 சதவீத மாற்றுத்திறனாளியான அவர் சக்கர நாற்காலியிலேயே சிறையில் இருந்ததால் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில் பன்சாரே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

முடிவில், இந்த வழக்கிலிருந்து முன்னாள் பேராசிரியர் சாய்பாபா மற்றும் அவருடன் கைதான 4 பேரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த தீர்ப்பிற்குப் பின் 7 ஆண்டுகள் சிறையிலிருந்த ஜி.என்.சாய்பாபா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.