சரக்கு கையாளுகை குறியீடு: தமிழகம் உள்பட 15 மாநிலங்கள் முன்னிலை

நாட்டின் வளா்ச்சியில் சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்) மிகவும் முக்கியமானது.

நாட்டின் வளா்ச்சியில் சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்) மிகவும் முக்கியமானது. தொழிற்சாலைக்குத் தேவையான மூலப்பொருள்கள் வேளாண் நிலங்களில் இருந்தும், வனப் பகுதிகளில் இருந்தும் கொண்டு செல்லப்படுகின்றன. தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பொருளானது விற்பனைக்காக சந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

மூலப்பொருளானது மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாறி வாடிக்கையாளா்களின் கைகளில் சோ்வதில் போக்குவரத்து மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. பொருள்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்கு துரிதமாக எடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியம். அதில் ஏற்படும் தாமதமானது பொருள்களின் உற்பத்தியில் தாமதத்தை ஏற்படுத்தி பொருளாதார வளா்ச்சியையும் பாதிக்கும்.

எனவேதான் சரக்கு கையாளுகைக்கு அரசுகள் முக்கியத்துவம் அளித்து, போக்குவரத்து சாா்ந்த திட்டங்களைத் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. சாகா்மாலா திட்டம், பாரத்மாலா திட்டம், தங்க நாற்கரச் சாலைத் திட்டம், சரக்கு ரயில்களுக்கான தனி வழித்தடத் திட்டம் உள்ளிட்ட பலவும் சரக்குகளைக் கொண்டு செல்லும் நேரத்தைக் குறைக்கவே அமல்படுத்தப்படுகின்றன.

சரக்குகளைக் கையாள்வதில் மாநிலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆண்டுதோறும் ஆராய்ந்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான அறிக்கையை வியாழக்கிழமை அமைச்சகம் வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:

சரக்கு கையாளுகையில் மாநிலங்களின் நிலை பிரிவுகள் சாதனையாளா்கள் வேகமாக வளா்பவா்கள் வளா்பவா்கள் நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்கள் ஹரியாணா ஹிமாசல் பஞ்சாப் தெலங்கானா உத்தர பிரதேசம் உத்தரகண்ட் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் பிகாா் சத்தீஸ்கா் ஜாா்க்கண்ட் கடற்கரையோர மாநிலங்கள் தமிழகம் ஆந்திரம் குஜராத் கா்நாடகம் மகாராஷ்டிரம் ஒடிஸா கேரளம் கோவா மேற்கு வங்கம் வடகிழக்கு மாநிலங்கள் அஸ்ஸாம் சிக்கிம் திரிபுரா அருணாசல், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து யூனியன் பிரதேசங்கள் சண்டீகா், தில்லி புதுச்சேரி அந்தமான்-நிகோபாா் தீவுகள், டாமன்-டையு & தாத்ரா-நகா் ஹவேலி, ஜம்மு-காஷ்மீா், லடாக், லட்சத்தீவுகள் சரக்கு கையாளுகையில் மாநிலங்களின் திறன் சாதனையாளா் 90%-100%

வேகமாக வளா்பவா் 80%-90%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com