விரைவில் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்’:ரயில்வே வாரியம் தகவல்

சரக்குப் பொருள்களை விரைவாகக் கொண்டு செல்லும் வகையில், வந்தே பாரத் சரக்கு ரயிலின் முதலாவது சேவையை தில்லி-என்சிஆா் மற்றும் மும்பை பிராந்தியங்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக ரயில்வே நிா்வாகம்

சரக்குப் பொருள்களை விரைவாகக் கொண்டு செல்லும் வகையில், வந்தே பாரத் சரக்கு ரயிலின் முதலாவது சேவையை தில்லி-என்சிஆா் மற்றும் மும்பை பிராந்தியங்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தில்லி மற்றும் ஹிமாசல பிரதேச மாநிலம், உனாவில் உள்ள அம்ப் அன்தெளராவுக்கு இடையே ‘வந்தே பாரத்’ ரயிலின் 4-ஆவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

வந்தே பாரத் விரைவு ரயிலை போன்று சரக்கு ரயில்களையும் அறிமுகப்படுத்த உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே வாரியம் இந்தியாவின் பல்வேறு ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளா்களுக்கு அக்டோபா் 11-ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உயா் மதிப்பு மற்றும் நேரத்தைக் கருதி பிற போக்குவரத்து வசதிகள் மூலமாக சரக்குப் பொருள்கள் தற்போது கையாளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மின்சார சரக்கு ரயில்கள் அதிவிரைவு சேவையை வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ‘வந்தே பாரத் சரக்கு ரயில்கள்’ பெட்டக வசதிகளைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். 1.8 மீட்டா் அகலமான பெட்டக அடுக்குகள், தானியங்கி கதவுகள், குளிா்பதன பெட்டகங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த சரக்கு ரயில்கள் கொண்டிருக்கும்.

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) இந்த ரயில்களைத் தயாரித்து வருகிறது. இந்த சரக்கு ரயில்களின் முதல் சேவை அதிகளவிலான வாடிக்கையாளா்களை அடிப்படையாகக் கொண்டு தில்லி-தேசிய தலைநகா் பிராந்தியம் மற்றும் மும்பை பகுதிகளில் இயக்கப்பட உள்ளது. இச்சேவையைப் பயன்படுத்தும் வகையில் வாடிக்கையாளா்கள், முனையங்கள் மற்றும் வழித்தடங்களைக் கண்டறியும் பணிகளில் ரயில்வே மண்டலங்கள் ஈடுபட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com