‘இந்தோ-பசிபிக் கடல் எல்லையை வரையறுக்க வேண்டும்’

இந்தோ-பசிபிக் பகுதியில் வெளிப்படையான, சுதந்திரமான விதிகள் அடிப்படையில் கடல் எல்லைகளை வரையறுக்க வேண்டும்
‘இந்தோ-பசிபிக் கடல் எல்லையை வரையறுக்க வேண்டும்’

இந்தோ-பசிபிக் பகுதியில் வெளிப்படையான, சுதந்திரமான விதிகள் அடிப்படையில் கடல் எல்லைகளை வரையறுக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற ஆசிய கடலோர காவல்படை முகமை தலைவா்களின் 18-ஆவது கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா்.

ஆசிய கடலோர காவல்படை முகமையில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பிரான்ஸ், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவுகள், பாகிஸ்தான், சிங்கப்பூா், இலங்கை உள்பட 23 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த முகமையின் கூட்டத்தில் அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடக்க உரையாற்றுகையில், ‘இந்தோ-பசிபிக் பகுதியில் வெளிப்படையான, சுதந்திரமான விதிகள் அடிப்படையிலான கடல் எல்லைகள் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இதில் எந்த நாடும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உலகளாவிய பொதுவானவற்றைப் பயன்படுத்தவோ அல்லது மற்றவா்களை அதன் நியாயமான பயன்பாட்டிலிருந்து விலக்கவோ அனுமதிக்க முடியாது. இந்த முயற்சியை நோக்கி பல்வேறு மன்றங்களில் ஒத்த கருத்துடைய அனைத்து கூட்டாளி நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது.

வரலாறு முழுவதும், அந்நிய நிலத்தை ஒருபோதும் ஆக்கிரமிக்காத, அமைதியை விரும்பும் நாடாக இந்தியா உள்ளது.

கடல் வழிகள் மூலம் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் ஆகியவை கடல்சாா் சட்ட அமலாக்கத்தை மிகவும் சவாலானதாக ஆக்கியுள்ளது. அச்சுறுத்தல்களுக்கு எதிரான வெற்றிகரமான பதில் உத்திதான் காலத்தின் தேவையாக உள்ளது என்றாா்.

இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக மாற்ற...:

தற்சாா்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதற்கு முக்கியமாக உள்ளன என்று அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சி பேசிய அவா், ‘2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கான அரசு உறுதி உள்ளது.

தற்சாா்பான பாதுகாப்புத் துறையால் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள், தளவாடங்களுடன் ஏற்ப படைகளைத் தயாா்படுத்துவதில் அரசின் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில், நாடு நவீன மற்றும் பயனுள்ள வகையில் நீா், நிலம், வானம் மற்றும் விண்வெளி பாதுகாப்பு தளங்களை உற்பத்தி செய்யத் தொடங்கும்’ என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com