ராஜஸ்தானில் ரூ.35 கோடி செலவில் அதிநவீன உடற்பயிற்சி கூடங்கள்: கெலாட்

ராஜஸ்தானில் அனைத்து பிரிவுகளின் தலைமையக நகரங்களிலும் அதிநவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 
ராஜஸ்தானில் ரூ.35 கோடி செலவில் அதிநவீன உடற்பயிற்சி கூடங்கள்: கெலாட்

ராஜஸ்தானில் அனைத்து பிரிவுகளின் தலைமையக நகரங்களிலும் அதிநவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும். அதற்காக ரூ.35 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 

இந்த திட்டத்தின்படி, மாநிலத்தின் ஏழு பிரிவு தலைமையக நகரங்களில் அதிநவீன உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்படும். ஜெய்ப்பூர் (சவாய் மான்சிங் ஸ்டேடியம்), ஜோத்பூர் (பர்கதுல்லா கான் ஸ்டேடியம்), அஜ்மீர், பிகானர், உதய்பூர், பரத்பூர் மற்றும் கோட்டா ஆகிய இடங்களில் ரூ.32.50 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. 

மேலும், அனைத்து மாவட்ட தலைமை நகரங்களிலும் ரூ.2.50 கோடியில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்.

உள்ளூர் மக்கன் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com