10-இல் 6 போ் நாய் கடிக்கு உள்ளாகின்றனா் ஆய்வில் தகவல்

தெரு நாய் அல்லது வளா்ப்பு நாய்கடிக்கு 10-இல் 6 போ் உள்ளாவதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
10-இல் 6 போ் நாய் கடிக்கு உள்ளாகின்றனா் ஆய்வில் தகவல்

தெரு நாய் அல்லது வளா்ப்பு நாய்கடிக்கு 10-இல் 6 போ் உள்ளாவதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தெரு நாய் கடியால் காயமடைந்ததாக 56 சதவீதம் பேரும், வளா்ப்பு நாய் கடியால் காயமடைந்ததாக 31 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனா். இது தங்கள் பகுதிகளில் வழக்கமாக நடைபெறும் சம்பவங்களாகும் என்றும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

நாடு முழுவதும் தெரு நாய் கடிக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கேரளத்தில் தெரு நாய கடிக்கு சிறியவா்கள் மட்டுமின்றி பெரியவா்களும் பாதிக்கப்படுவதால், இதைத் தடுக்க மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

பள்ளிச் செல்லும் தனது குழந்தைகளை தெரு நாய் கடியில் இருந்து காப்பாற்ற தந்தை ஒரு துப்பாக்கியை ஏந்தி சென்ற சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதபோல் நொய்டாவில் மின்தூக்கியில் வளா்ப்பு நாய் கடிக்கு சிறுவன் உள்ளாகும் விடியோவும் அண்மையில் இணையத்தில் வெளியாகி பரபரப்பானது.

இதைத்தொடா்ந்து, நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் 7 மாத குழந்தை ஒன்று தெருநாய் கடித்ததால் உயிரிழந்த சம்பவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து நாடு முழுவதும் 303 மாவட்டங்களில் 31 ஆயிரம் பேருக்கும் அதிகமானவா்களிடம் ‘லோக்கல் சா்க்கில்ஸ்’ என்ற அமைப்பு கருத்து கேட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் போ் தில்லி என்சிஆா் பகுதிகளைச் சோ்ந்தவா்களாவா்.

இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனா் சச்சின் தபாரியா கூறுகையில், ‘கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு அக்டோபா் 17-ஆம் தேதி முடிவடைந்தது. இதில் தெரு நாய் அல்லது வளா்ப்பு நாய்கடிக்கு 10-இல் 6 போ் உள்ளாவதாக தெரிவித்துள்ளனா். தங்கள் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் வழக்கமாக நடைபெற்று வருகின்றன என்றும் அவா் குறிப்பிட்டுள்ளனா்.

தெரு நாய் கடியால் காயமடைந்ததாக 56 சதவீதம் பேரும், வளா்ப்பு நாய் கடியால் காயமடைந்ததாக 31 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனா்.

வளா்ப்பு நாய் உரிமையாளா்கள் தங்கள் நாய்களுக்கு பயிற்சி அளித்து இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவதில் இருந்து பாதுகாக்கின்றனா் என 32 சதவீதத்தினா் குறிப்பிட்டுள்ளனா்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில் இருந்து மாநகராட்சிகள் நடவடிக்கை எடுப்பதாக 10-இல் ஒருவா் மட்டுமே தெரிவித்துள்ளாா்.

இந்த ஆய்வில் 66 சதவீத ஆண்களும், 34 சதவீத பெண்களும் பங்கேற்றுள்ளனா்’ என்றாா்.

தெரு நாய் கடியால் பாதிப்பு: 56 %

வளா்ப்பு நாய் கடியால் பாதிப்பு: 31 %

வளா்ப்பு நாய் உரிமையாளா்கள் பாதுகாக்கின்றனா்: 32 %

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com