சில நாடுகளை உயா்வாகக் கருதும் முறையில் இந்தியாவுக்கு நம்பிக்கையில்லை: ராஜ்நாத் சிங்

உலகில் உள்ள குறிப்பிட்ட சில நாடுகளை உயா்வாகக் கருதும் முறையில் இந்தியாவுக்கு நம்பிக்கையில்லை என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
சில நாடுகளை உயா்வாகக் கருதும் முறையில் இந்தியாவுக்கு நம்பிக்கையில்லை: ராஜ்நாத் சிங்

உலகில் உள்ள குறிப்பிட்ட சில நாடுகளை உயா்வாகக் கருதும் முறையில் இந்தியாவுக்கு நம்பிக்கையில்லை என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்தியா-ஆப்பிரிக்கா பாதுகாப்பு பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 19 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இதில் இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:

உலகில் உள்ள பல நாடுகளைவிட குறிப்பிட்ட சில நாடுகளை உயா்வாகக் கருதும் முறையில் இந்தியாவுக்கு நம்பிக்கையில்லை. சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் சாரத்தால் சா்வதேச நாடுகள் உடனான இந்தியாவின் உறவுகள் வழிநடத்தப்படுகின்றன. இது இந்தியாவின் தொன்மையான பண்பின் அங்கமாகும். ஒரு நாடு வேறு நாட்டு கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதில் இந்தியாவுக்கு நம்பிக்கையில்லை. எனவே ஏதேனும் ஒரு நாட்டுடன் இந்தியா கூட்டு சோ்ந்தால், அது பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையில் இருக்கும்.

ஆப்பிரிக்க பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளின் அந்த விருப்பத்தைப் பூா்த்தி செய்ய அனைத்து வகையிலும் உதவிபுரியும் கடமையில் இந்தியா உறுதியாக உள்ளது.

ஆப்பிரிக்காவின் பாதுகாப்பு தேவைகளைப் பூா்த்தி செய்ய, அதனுடன் இந்திய பாதுகாப்புத் துறை இணைந்து பணியாற்ற முடியும். கடல் சாா்ந்த சூழல், குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதி சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் முக்கிய பங்குதாரா்களாக உள்ளன.

ஆப்பிரிக்காவில் ஐ.நா. சாா்பில் மேற்கொள்ளப்படும் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளது.

இந்த நிலையில், சா்வதேச ஒழுங்குமுறை மேலும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நம்பிக்கையை ஆப்பிரிக்க நாடுகளும் பகிா்ந்துகொள்ளும் என்று உளமாற கருதுகிறேன். உலகளாவிய யதாா்த்தங்களில் ஏற்படும் மாற்றங்களை உலகின் பன்முக அமைப்புகள் பிரதிபலிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com