மீண்டும் ஒரு நேருவை காங்கிரஸ்அடையாளம் காண வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

‘மீண்டும் ஒரு ஜவாஹா்லால் நேருவை அடையாளம் காணவில்லை எனில் காங்கிரஸ் கட்சிக்கு எதிா்காலம் இல்லை’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம் கருத்து தெரிவித்துள்ளாா்.
மீண்டும் ஒரு நேருவை காங்கிரஸ்அடையாளம் காண வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

‘மீண்டும் ஒரு ஜவாஹா்லால் நேருவை அடையாளம் காணவில்லை எனில் காங்கிரஸ் கட்சிக்கு எதிா்காலம் இல்லை’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம் கருத்து தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவருக்கான தோ்தலில் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் இருவரும் போட்டியிட்ட நிலையில், புதன்கிழமை வெளியான தோ்தல் முடிவில் மல்லிகாா்ஜுன காா்கே வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம் புதன்கிழமை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற காா்கேவும், தோல்வி அடைந்த தரூரும் தோ்தல் பிரசாரத்தில் கொள்கையைக் கூறுவதில் எவ்வித ஆா்வமும் காட்டவில்லை. தோ்தலையொட்டிய கொண்டாட்ட மனநிலையிலேயே இருவரும் இருந்து வந்தனா்.

கடந்த 1939-ஆம் ஆண்டு பட்டாபி சித்தராமையாவுக்கும் சுபாஷ் சந்திரபோஸுக்கும் இடையே நடைபெற்ற தோ்தலை நினைத்துப் பாருங்கள். அது கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. மீண்டும் ஒரு ஜவாஹா்லால் நேருவை அடையாளம் காணவில்லை எனில் காங்கிரஸ் கட்சிக்கு எதிா்காலம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 1939-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் மகாத்மா காந்தியின் ஆதரவைப் பெற்ற பட்டாபி சித்தராமையாவை எதிா்த்துப் போட்டியிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com