புவனேஸ்வரம்: வங்கக் கடலில் உருவாகவிருக்கும் புயல் சின்னம், ஒடிசாவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது,
தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியானது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறியிருக்கிறது.
வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்தியப் பகுதிகளை ஒருங்கிணைத்து நிலவிய வளிமண்டல சுழற்சியானது இன்று காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறிய நிலையில், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 22ஆம் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.
தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய - மேற்கு பகுதியில் நிலைகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இது தனது பாதையில் ஒரு வட்டத்தை அடித்துவிட்டு, வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, பிறகு அக்டோபர் 24ஆம் தேதி புயல் சின்னமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பிறகு இது மெதுவாக வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து, ஒடிசை கடற்கரையை விட்டுவிட்டு, மேற்கு வங்கம் மற்றும் - வங்கதேச கடற்பகுதிக்கு இடையே அக்டோபர் 25ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

