விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரூபாய் மதிப்பு தொடர் சரிவு... பிரதமருக்கு சிதம்பரம் அறிவுரை என்ன தெரியுமா? 

ரூபாய் மதிப்பு தொடர் சரிந்து வருவதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட பொருளாதர நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும்

News image

கோப்புப்படம்

Updated On :21 அக்டோபர் 2022, 5:40 am

DIN

ரூபாயின் மதிப்பு தொடர் சரிந்து வருவதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட பொருளாதர நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.   

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது. வியாழக்கிழமை  இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.06 என்ற நிலையை எட்டியது. 

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், பிரதமர் நரேந்திர மோடி ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட பொருளாதர நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் உதவியற்ற அரசாங்கமாக தெரிகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதால், ரூபாய் பணவீக்கம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் வட்டி விகிதங்கள் தீவிர விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இந்த நேரத்தில், அரசாங்கத்திற்கு அனைத்து ஞானமும் அனுபவமும் தேவை என்றும்,  இந்திய ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி விவகாரத்தில் தீர்வு காண பிரதமருக்கு எனது அறிவுரை என்னவென்றால், நாட்டின் நலனை மையமாக கொண்டு அரசு எடுக்கக்கூடிய அடுத்த நடவடிக்கைகளை பரிசீலிக்க உடனடியாக நிபுணர்களுடன் கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும். 

அதாவது, டாக்டர் சி. ரங்கராஜன், டாக்டர் ஒய் வி ரெட்டி, டாக்டர் ராகேஷ் மோகன், டாக்டர் ரகுராம் ராஜன் மற்றும் மாண்டேக் சிங் அலுவாலியா போன்ற நிபுணர்களுடன் பிரதமர் மோடி உடனடியாக கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும் என்று சிதம்பரம் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.