
முந்தைய அரசுகள் நாட்டிலுள்ள நம்பிக்கை சார்ந்த மையங்களை கண்டு கொள்ளவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட நம்பிக்கை சார்ந்த இடங்கள் அனைத்தின் பெருமைகள் அனைத்தும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
காசி விஸ்வநாத கோயில், உஜ்ஜைன் மற்றும் அயோத்தி கோயில் மறு சீரமைக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இவைகளை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டுமில்லாமல் சிலரிடம் அடிமைத் தன மனப்பான்மையும் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க: படு கிளாமர் படங்களைப் பதிவிட்ட ஜான்வி - கொளுந்துவிட்டு எரியும் இன்ஸ்டாகிராம்
உத்தரகண்டின் மனா கிராமத்தில் கவுரிகண்ட்-கேதர்நாத் இடையே ரோப்கார் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: அடிமைத் தன மனப்பான்மை சிலரிடம் அதிகமாகியுள்ளது. அதனால், அவர்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைக் கூட ஏதோ குற்றம் போல பார்க்கிறார்கள். அவர்கள் மற்ற நாடுகளில் உள்ள நம்பிக்கை சார்ந்த இடங்கள் குறித்து சிறப்பாக பேசுகிறார்கள். ஆனால், தங்களது சொந்த நாட்டில் உள்ள மக்களின் நம்பிக்கை சார்ந்த இடங்களை கண்டு கொள்வதில்லை. பல ஆண்டுகளாக கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்துள்ள இடங்கள் குறித்தும் மக்களின் கலாசாரம் குறித்தும் முந்தைய அரசுகளுக்கு அக்கறை இல்லை. நமது கலாசாரம் மற்றும் நம்பிக்கை சார்ந்த இடங்கள் வெறும் இடங்கள் அல்ல. அவை நமது கலாசாரத்தின் அடையாளம். அவை நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றைப் போன்றது என்றார்.