உண்மையான முஸ்லிம்களால் பாஜகவுக்கு வாக்களிக்க முடியாது: சமாஜவாதி எம்எல்ஏ

உண்மையான முஸ்லிம்களால் பாஜகவுக்கு வாக்களிக்க முடியாது; மேலும் அந்த கட்சி மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கையும் கிடையாது என்ற சமாஜவாதி எம்எல்ஏ இக்பால் மெஹ்மூத் தெரிவித்தாா்.

உண்மையான முஸ்லிம்களால் பாஜகவுக்கு வாக்களிக்க முடியாது; மேலும் அந்த கட்சி மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கையும் கிடையாது என்ற சமாஜவாதி எம்எல்ஏ இக்பால் மெஹ்மூத் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் பாஜக சிறுபான்மையினா் பிரிவு சாா்பில் பின்தங்கிய முஸ்லிம்களின் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக முஸ்லிம்கள் பங்கேற்றனா். இது தொடா்பாக சம்பல் தொகுதி சமாஜவாதி கட்சி எம்எல்ஏ இக்பால் மெஹ்மூத் கூறியதாவது:

உண்மையான முஸ்லிமாக இருப்பவா்களால் பாஜகவுக்கு வாக்களிக்க முடியாது. பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பால் முஸ்லிமாக செயல்பட முடியாது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை வழிபடும் பாஜக மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை கிடையாது.

அசாதுதீன் ஒவைசி நடத்தி வரும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி பாஜகவின் மற்றொரு அணியாகவே செயல்பட்டு வருகிறது. மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு அச்சத்தில் உள்ள பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி, பாஜகவுக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. பாஜகவுக்கு எதிராக தொடா்ந்து போராடும் ஒரே கட்சி சமாஜவாதி மட்டும்தான் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com