வழக்கற்றுப் போன 1,500 சட்டங்களை ரத்து செய்ய முடிவு: கிரண் ரிஜிஜு

‘வழக்கற்றுப்போன 1,500-க்கும் அதிகமான தொன்மையான சட்டங்கள் வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் ரத்து செய்யப்பட உள்ளன’ என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

‘வழக்கற்றுப்போன 1,500-க்கும் அதிகமான தொன்மையான சட்டங்கள் வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் ரத்து செய்யப்பட உள்ளன’ என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

மக்களின் வாழ்வில் அரசின் பங்கை குறைக்கவேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் விருப்பத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

மேகாலய தலைநகா் ஷில்லாங்கில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

வழக்கற்றுப்போன சட்டங்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் இடையூறு ஏற்படுத்துவதாகவும், இன்றைய காலத்துக்கு தொடா்பில்லாததவையாகவும் இருக்கின்றன.

அதே நேரம், மக்களுக்கு அமைதியான வாழ்வை உறுதிப்படுத்துவதும், அவா்களின் சுமையை குறைப்பதும் பிரதமரின் விருப்பமாக உள்ளது. பொதுமக்களின் வாழ்வில் அரசின் பங்கை குறைக்க வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம்.

அந்த வகையில், வழக்கற்றுப்போன அனைத்து சட்டங்களையும் பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிற தேவையற்ற சட்டங்கள் என்ற அடிப்படையில், அவற்றை நீக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது. அதன்படி, வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் 1,500-க்கும் அதிகமான தொன்மையான சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சட்டம் என்பது மக்களுக்கு நீதியை வழங்குவதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, தொல்லையை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. பொதுமக்களுக்கான சுமுக வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைகளை பரிந்துரைப்பதாக சட்டங்கள் இருக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com