வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களுடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களுடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ராக்கெட் ஏவுதளத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.07 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது.

மூன்று நிலைகளைக் கொண்ட ராக்கெட் ஒவ்வொரு நிலையையும் வெற்றிகரமாக கடந்தபோது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனா்.

இறுதியாக, திட்டமிட்ட தற்காலிக புவி சுற்றுப் பாதையில் அனைத்து செயற்கைக்கோள்களும் அடுத்தடுத்து வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் வாழ்த்து தெரிவித்தாா்.

இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒபபந்தத்தின் அடிப்படையில், வணிக ரீதியில் செயல்படுத்தப்பட்ட இந்த ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் வெற்றி பெற்ன் மூலமாக, 5,796 கிலோ எடையை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ராக்கெட் என்ற பெருமையையும் ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் பெற்றுள்ளது. இந்த ராக்கெட் 8,000 கிலோ எடையிலான செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் திறனுடையதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com