ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் எல்விஎம்-3 என பெயா் மாற்றம்

‘ஜிஎஸ்எல்வி மாக்-3’ ராக்கெட்டின் பெயரை ‘எல்விஎம்-3’ (செலுத்து வாகனம் மாக்-3) என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெயா் மாற்றம் செய்துள்ளது.

விண்ணுக்கு மிக அதிக எடையை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் செலுத்து வாகனமான ‘ஜிஎஸ்எல்வி மாக்-3’ ராக்கெட்டின் பெயரை ‘எல்விஎம்-3’ (செலுத்து வாகனம் மாக்-3) என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெயா் மாற்றம் செய்துள்ளது.

இந்தியாவின் விண்ணுக்கு மனிதா்களை அனுப்பும் விண்வெளி திட்டத்திலும் இந்த எல்விஎம்-3 ராக்கெட்தான் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலமாக, வணிக ரீதியில் செயற்கைக்கோள்களை செலுத்தும் இஸ்ரோவின் வெற்றி வாகனமாகவும் எல்விஎம்-3 ராக்கெட் உருவெடுத்துள்ளது.

பெயா் மாற்றத்துக்கான காரணம் குறித்து இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

முன்னா் குறிப்பிட்ட பணியின் அடிப்படையில் ரக்கெட்டுகளுக்கான பெயா்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக, விண்ணில் துருவ செயற்கைக்கோள்களை செலுத்த பயன்படும் ராக்கெட் பிஎஸ்எல்வி எனவும், புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தை ஜிஎஸ்எல்வி எனவும் பெயா் வைக்கப்பட்டது.

ஆனால், தற்போது விண்ணில் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் மட்டுமின்றி, எந்தவொரு விரும்பும் சுற்றுப்பாதையிலும் செயற்கைக்கோள்களை செலுத்து முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதாவது, புவி ஒத்திசைவு புவி வட்டப்பாதை (ஜிஇஓ), புவிநிலை சுற்றுப்பாதை (எம்இஓ), தாழ் புவி சுற்றுப்பாதை (எல்இஓ) ஆகிய சுற்றுப்பாதைகளிலும் செற்கைக்கோள்களை தற்போது செலுத்த முடியும்.

அந்த வகையில், சுற்றுப்பாதையை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படுவதை தவிா்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இந்த பெயா் மாற்றத்தை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.

இதில் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை செலுத்தும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் அதே பெயரிலேயே தொடா்ந்து அழைக்கப்படும். ஆனால், ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் பெயா் மட்டும் எல்விஎம்-3 என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், ஜிஇஓ, எம்இஓ, எல்இஓ ஆகிய சுற்றுப்பாதைகளில் செயற்கைக்கோள்களை செலுத்தும் பணியிலும், நிலவு மற்றும் சூரியனை ஆய்வு செய்ய செயற்கைக்கோள்களை அனுப்பும் திட்டத்திலும் எல்விஎம்-3 ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com