தென்மேற்கு பருவமழை நிறைவு: இந்திய வானிலை ஆய்வு மையம்

நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை விடைபெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை விடைபெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மையம் தெரிவித்துள்ளதாவது:

வழக்கத்தைவிட ஒரு வாரம் தாமதமாக, நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை ஞாயிற்றுக்கிழமை (அக்.23) விடைபெற்றது. தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக இந்தப் பருவமழைப் பொழிவு இயல்பாக இருந்தது. இந்த முறை 925 மி.மீ. மழைப்பொழிவு பதிவான நிலையில், இது நீண்ட கால சராசரியான 880 மி.மீ-ஐவிட 106 சதவீதம் அதிகம்.

நாட்டில் அக்.1 முதல் அக்.23-ஆம் தேதி வரை பருவமழைக்குப் பிந்தைய மழைப்பொழிவு 104 மி.மீ-ஆக பதிவானது. இது வழக்கமான 63.2 மி.மீ. மழைப்பொழிவை காட்டிலும் 65 சதவீதம் கூடுதலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் புயல்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், அது புயலாக ஞாயிற்றுக்கிழமை தீவிரமடைந்தது. அந்தப் புயல் வங்கதேசத்தை நோக்கி செல்லும் நிலையில், அந்நாட்டின் டிங்கோனா தீவு மற்றும் சந்த்விப் பகுதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இந்தப் புயல் காரணமாக, ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பலத்த மழைப் பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயலுக்கு ‘சித்ரங்’ என பெயரிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com