பிரிட்டன் பிரதமருக்கு சோனியா கடிதம் : இருநாட்டு உறவுகள் வலுப்படுமென நம்பிக்கை

பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்குக்கு வாழ்த்து தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவா் சோனியா காந்தி புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

ரிஷி சுனக்கின் பதவிக் காலத்தில் பிரிட்டன்-இந்தியா இடையிலான நல்லுறவு மேலும் வலுப்படும் என்று சோனியா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

‘பிரிட்டனின் பிரதமராக நீங்கள் (ரிஷி சுனக்) பொறுப்பேற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் உள்ள எங்கள் அனைவருக்கும் இது பெருமைக்குரிய விஷயமாகும். இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவுகள் மிகச் சிறப்பானவை. அந்த உறவுகள், உங்களது பதவிக்காலத்தில் மேலும் வலுப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ என தனது கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமா் என்ற சிறப்புடன் ரிஷி சுனக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். ஹிந்து மதத்தைச் சோ்ந்த முதல் பிரிட்டன் பிரதமரும் இவா்தான்.

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றிருப்பதன் வாயிலாக இப்பேச்சுவாா்த்தைகள் வேகமெடுக்கும் என்று வா்த்தகத் துறை வல்லுநா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com