சத் பூஜைக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார் கைலாஷ் கெலாட்! 

யமுனை நதிக்கரையில் உள்ள ஹாதி காட் பகுதியில் சத் பூஜைக்கான முன்னேற்பாடுகளை தில்லி வருவாய்த்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் ஆய்வு செய்தார். 
சத் பூஜைக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார் கைலாஷ் கெலாட்! 

யமுனை நதிக்கரையில் உள்ள ஹாதி காட் பகுதியில் சத் பூஜைக்கான முன்னேற்பாடுகளை தில்லி வருவாய்த்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் ஆய்வு செய்தார். 

தில்லியில் இந்தாண்டு சத் பூஜை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சத் விழா கொண்டாடப்படுகிறது. 

தில்லியில் வசிக்கும் பிகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த திருவிழா மிகவும் பிரபலமானது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 

சத் பூஜைக்கான சுகாதாரம், விளக்குகள், நீர் வழங்கல் ஏற்பாடுகள் மற்றும் தற்காலிக குளங்களைத் தோண்டுதல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தேன். மேலும் பணிகளை விரைவுபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு, தில்லி ஜல் போர்டு, பொதுப்பணித் துறை ஆகிய அனைத்து அரசு நிறுவனங்களும் ஏற்பாடுகளை உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்றார். 

தில்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவும் , யமுனையில் நியமிக்கப்பட்ட நீர்நிலைகளில் சத் பூஜை நடத்த ஒப்புதல் அளித்தார். 

இந்தாண்டு தில்லி அரசு நகரம் முழுவதும் சத் பூஜைக்காக 1,100 நீர்நிலைகள் உருவாக்கியுள்ளது. சத் பூஜையை வெற்றிகரமாக நடத்த ஒருங்கிணைப்புடன் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com