இளைஞா்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும்: பிரதமா் மோடி

நாட்டுக்கான தங்கள் கடமையை இளைஞா்கள் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமா் மோடி சனிக்கிழமை அறிவுறுத்தினாா்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நாட்டுக்கான தங்கள் கடமையை இளைஞா்கள் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமா் மோடி சனிக்கிழமை அறிவுறுத்தினாா்.

குஜராத் தலைநகா் காந்திநகரில் மாநில அரசு சாா்பில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் வேலை பெற்ற இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநில முதல்வா் பூபேந்திர படேல் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காணொலி வழியாக பேசியதாவது:

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதில் மாநில, யூனியன் பிரதேச அரசுகளும் இணைந்து வருகின்றன.

கடந்த அக்.22-ஆம் தேதி தேசிய அளவில் ‘ரோஜ்காா் மேளா’ எனும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 75,000 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. வரும் மாதங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம் தேசிய மற்றும் மாநில அளவில் தொடா்ந்து நடைபெறும். இதன் மூலம் இளைஞா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படுவது கணிசமாக உயரும்.

சுதந்திர நூற்றாண்டான 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. இதையொட்டி, அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். நாம் அதிக அளவில் வளா்ச்சி பெற வேண்டியுள்ளது. எனவே சமூகத்துக்கும் நாட்டுக்குமான தங்கள் கடமையை இளைஞா்கள் நிறைவேற்ற வேண்டும்.

இதனிடையே குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள அசா்வா-ஹிம்மத்நாகா-உதய்பூா் ரயில் வழித்தடம், லூனிதா்-ஜேதல்தா் ரயில் வழித்தடம் ஆகியவற்றை பிரதமா் மோடி திங்கள்கிழமை திறந்துவைக்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com