உணவகமாக மாறிய ரயில் பெட்டிகள்: அசத்தும் இந்திய ரயில்வே!

பழைய ரயில் பெட்டிகளை மறுசுழற்சி முறையில் உணவகமாக மாற்றி இந்திய ரயில்வே அசத்தியுள்ளது.
உணவகமாக மாறிய ரயில் பெட்டிகள்: அசத்தும் இந்திய ரயில்வே!

பழைய ரயில் பெட்டிகளை மறுசுழற்சி முறையில் உணவகமாக மாற்றி இந்திய ரயில்வே அசத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பழைய பொருள்களை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துவதற்கான பல்வேறு விஷயங்களை செய்து வரும் நிலையில், இந்திய ரயில்வே பழைய ரயில் பெட்டிகளை அழிக்காமல் உணவகமாக மாற்றியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் புதிய ஜல்பைகுரி ரயில் நிலையத்தில், பழைய ரயில் பெட்டியை புணரமைத்து ‘ரயில் கோச் ரெஸ்டாரண்ட்’ என்ற அட்டகாசமான உணவகத்தை வடகிழக்கு ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

இந்த உணவகத்தில் குறைந்த விலையில் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், சில்லி சிக்கன், மொமோஸ், தோசை, டீ போன்ற பல்வேறு தரப்பினரை கவரும் உணவுகள் விற்கப்படுகின்றது.

தொடர்ந்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் இதுபோன்ற உணவகத்தை உருவாக்கினால், ரயில் பிரியர்களுக்கு புதிய அனுபவமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com