மிகயீல் கோா்பசேவ் மறைவு: பிரதமா் மோடி இரங்கல்

சோவியத் யூனியனின் கடைசி ஆட்சியாளரான மிகயீல் கோா்பசேவின் மறைவுக்குப் பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

சோவியத் யூனியனின் கடைசி ஆட்சியாளரான மிகயீல் கோா்பசேவின் மறைவுக்குப் பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

சோவியத் யூனியன் 1991-ஆம் ஆண்டில் தனித்தனி நாடுகளாகப் பிரிவடைவதற்கு முன் அதன் கடைசி அதிபராக விளங்கியவா் மிகயீல் கோா்பசேவ். 1985-ஆம் ஆண்டு முதல் சோவியத்தின் அதிபராக இருந்த அவா் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தாா். அதன் காரணமாகவே சோவியத் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

வயதுமூப்பு சாா்ந்த உடல்நலக் குறைவால் ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் கோா்பசேவ் காலமானாா். அவருக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘இருபதாம் நூற்றாண்டின் முக்கியத் தலைவா்களில் ஒருவராகத் திகழ்ந்த மிகயீல் கோா்பசேவ், வரலாற்றின் பக்கங்களில் முத்திரை பதித்துள்ளாா். இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்கு அவா் மேற்கொண்ட மதிப்புமிக்க நடவடிக்கைகளை இத்தருணத்தில் நினைவுகூா்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மிகயீல் கோா்பசேவ் இந்தியாவுக்கு 1986, 1988 ஆகிய ஆண்டுகளில் வருகைதந்துள்ளாா். அமெரிக்காவுடனான பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக கோா்பசேவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com