ஜாா்க்கண்ட், கா்சாவானா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற மோதலில் இரண்டு மாவோயிஸ்டுகள் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
உயிரிழந்தவா்கள் காலி முனாட் (32), ரீலா மாலா மாஞ்சி (22) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவரும் கொல்லப்பட்டதாகவும், அவா்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.