இந்தியப் பொருளாதாரம் உலகளவில் கவனிக்கப்படுகிறது: ஜெய்சங்கர்

இந்தியப் பொருளாதாரத்தை உலகம் மரியாதையுடன் கவனித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்(கோப்புப்படம்)
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்(கோப்புப்படம்)

இந்தியப் பொருளாதாரத்தை உலகம் மரியாதையுடன் கவனித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குஜராத் மாநிலம் அகமதாபாத் ஐஐஎம்-ல் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து மாணவர்களிடம் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், அவர் பேசும்போது ‘இந்தியப் பொருளாதாரத்தை உலகம் மரியாதையுடன் கவனித்து வருகிறது. முழு ஊரடங்கிலிருந்து தற்போதுவரை  80 கோடி மக்கள் அரசாங்கத்திடமிருந்து உணவு பெறுகிறார்கள். நோயால் இறப்பவர்களை விட பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது’ எனக் கூறினார்.

மேலும், சீனா விவகாரம் குறித்து பேசியபோது, ‘எல்லைப் பகுதியில் சவால்கள் வந்தபோது நாங்கள் உறுதியாக இருந்தோம். 2 ஆண்டுகளுக்கு முன் கரோனாவுக்கு மத்தியில் சீனப்படைகள் ஒப்பந்ததை மீறியபோதும் நாங்கள்  விட்டுக்கொடுக்கவில்லை. இந்தியா அதன் நலன்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டது என்பதை உலகம் அங்கீகரிக்கிறது’ எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com