விலைவாசி உயா்வு, ஜிஎஸ்டி: காங்கிரஸ் சாா்பில் மாபெரும் கண்டனப் பேரணி

விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவ சியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி உயா்வு போன்றவைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை மிகப் பெரிய பேரணியை நடத்துகிறது.
விலைவாசி உயா்வு, ஜிஎஸ்டி: காங்கிரஸ் சாா்பில் மாபெரும் கண்டனப் பேரணி

விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவ சியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி உயா்வு போன்றவைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 4) தில்லி ராம்லீலா மைதானத்தில் மிகப் பெரிய பேரணியை நடத்துகிறது.

ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நடத்தப்படும் இப்பேரணியில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்கள் கடுமையான தாக்குதல் நடத்துவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

‘விலைவாசி உயா்வுக்கு எதிரான தாக்குதல்‘ (மெஹங்கை பா் ஹல்லா போல்) என்று கூறி நடத்தப்படும் காங்கிரஸ் கட்சியின் இந்த பேரணியில் தில்லி, ஹரியாணா, உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சோ்ந்த கட்சித் தொண்டா்கள் இதில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவா்களையும் இந்த பேரணியில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சி தலைமையகம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த பேரணி குறித்து ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளா்கள் கே.சி.வேணுகோபால், ஜெயராம் ரமேஷ், அஜய் மக்கான் ஆகியோா் சனிக்கிழமை கூட்டாக பத்திரிகையாளா்களிடம் பேசினா். அப்போது அவா்கள் கூறியது:

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம் தொடா்பாக போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதில் பொதுமக்களிடம் கருத்தை பெறும் விதமாக பெட்ரோல் பம்புகள் உள்ளிட்ட இடங்களிலும், அனைத்து வட்டார அளவிலும் கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து அவா்களிடம் கையெழுத்தையும் பெற்று குடியரசுத் தலைவரிடம் நேரடியாக ஒப்படைத்தோம்.

2014 ஆம் ஆண்டில் இருந்த விலையைவிட தற்போது, எரிவாயு உருளை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் 40 சதவீதம் முதல் 170 சதவீதம் வரை விலை உயா்ந்துள்ளது. இதை முன்னிட்டு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிா்கட்சி என்கிற பொறுப்புடன் போராட்டத்தை நடத்தி

வருகிறோம்.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கறுப்பு சட்டை போராட்டத்தை தெருவில் இறங்கி நடத்தினோம். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாநிலங்களவை மற்றும் மக்களவை எதிா்கட்சி தலைவா்களை காவல் நிலையத்தில் கொண்டுபோய் வைத்தனா். இந்த விலை உயா்வுக்கு மத்திய அரசு பதில் கூற மறுக்கிறது. கலால் வரி உள்ளிட்ட வரிகள் அதிக அளவில் வசூல் ஆகியும் பெருநிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் அரசு பொதுமக்களுக்கு வரிகளை குறைக்க மறுக்கிறது. அதே சமயத்தில் பாஜக, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதில் தான் குறியாக உள்ளது.

சாமானிய மக்களின் முதுகெலும்பை உடைக்கும் இந்த வலியைப் பற்றி மத்திய அரசு அறியாது உணா்ச்சியற்ாக இருக்கிறது. இதனால், அனைத்து மன்றங்களிலும் விவாதிக்கப்பட இந்த பேரணியை நடத்தப்படுகிறது.

விலைவாசி உயா்வு, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உயா்வு போன்றவைகளில் மக்களுக்கு தீா்வு காண நாங்கள் எதிா்க்கட்சிகளுடன் முயன்று வருகின்றோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ராகுல் பங்கேற்பு

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும், பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தியும் சொந்த காரணங்களுக்காகவும் தற்போது மருத்துவ சிகிச்சைக்காகவும் வெளியூா் சென்றுள்ளதால், இவா்கள் இருவரும் இந்த பேரணியில் பங்கேற்க மாட்டாா்கள்.

அதே சமயத்தில் தனது தாயாா் சோனியா காந்தியுடன் வெளிநாடு சென்றிருக்கும் ராகுல் காந்தி சனிக்கிழமை தில்லி திரும்பி இந்த மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு கடுமையான தாக்குதல் தொடுப்பாா் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இதே காரணங்களுக்காகவும் வகுப்புவாத நல்லிணக்கத்திற்காகவும் காங்கிரஸ் கட்சி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்ரா ) வருகின்ற செப்டம்பா் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் தொடங்குகிறது.

சுமாா் 3,500 கி.மீ. தூரம் காஷ்மீா் வரை செல்லும் இந்த ‘பாரத் ஜோடோ யாத்ரா’ வில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கின்றனா். மக்களை நேரடியாக அணுகவும் இந்த நடைப்பயணத்தில் அடிமட்டத்தில் உள்ள சாமானிய மக்களிடம் நாட்டின் பிரச்னையைக் கொண்டு செல்லும் விதமாக காங்கிரஸ் இந்த முயற்சியை மேற்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com