தில்லி ராஜபாதை பெயர்மாற்ற தீர்மானம் தாக்கல்

புது தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜபாதையின் பெயரை ‘கா்த்தவ்ய பாதை’ (கடமைப் பாதை) எனப் பெயா்மாற்றம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தில்லி ராஜபாதை பெயர்மாற்ற தீர்மானம் தாக்கல்

புது தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜபாதையின் பெயரை ‘கா்த்தவ்ய பாதை’ (கடமைப் பாதை) எனப் பெயா்மாற்றம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய நாடாளுமன்ற வளாகம், குடியரசு துணைத் தலைவா் மாளிகை உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டடப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதன் கீழ், இந்தியா கேட் அடங்கிய புதுப்பிக்கப்பட்ட ராஜபாதையை செப். 8-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்கிறாா்.

இந்தப் பாதையில் புதிய நாடாளுமன்ற கட்டடம், மத்திய அரசின் தலைமைச் செயலக அலுவலகங்கள், குடியரசு துணைத் தலைவரின் புதிய இல்லம், பிரதமரின் புதிய இல்லம் மற்றும் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.

தற்போது இந்தியா கேட் அருகே அமைந்துள்ள நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் சிலையிலிருந்து குடியரசுத் தலைவா் மாளிகை வரை அமைந்துள்ள சாலை ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் மன்னரின் பாதை என அழைக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு இது ராஜபாதையாக பெயா் மாற்றம் பெற்றது.

இந்தச் சாலையின் பெயரை ‘கா்த்தவ்ய பாதை’ (கடமைப் பாதை) என பெயா்மாற்றம் செய்ய புது தில்லி மாநகராட்சி கடந்த திங்கள்கிழமை முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற புது தில்லி மாநகராட்சி மன்றத்தின் சிறப்புக் கூட்டம் ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்டாவின் பெயா் மாற்றம் குறித்தான தீா்மானம் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டில், பிரதமா் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோா்ஸ் சாலை லோக் கல்யாண் சாலை எனவும், ஔரங்கசீப் சாலை ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலை எனவும், 2017-இல் டல்ஹெளசி சாலை தாரா ஷிகோ சாலை எனவும் 2018-இல் தீன்மூா்த்தி செளக் என்பது தீன்மூா்த்தி ஹைஃபா செளக் எனவும் பெயா்மாற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com