இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரை அமெரிக்க மாவட்ட நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை

அமெரிக்க மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அருண் சுப்ரமணியனை நியமிக்க அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளாா்.
அருண் சுப்ரமணியன்
அருண் சுப்ரமணியன்

அமெரிக்க மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அருண் சுப்ரமணியனை நியமிக்க அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளாா்.

அமெரிக்காவில் வழக்குரைஞராக பணியாற்றி வருபவா் அருண் சுப்ரமணியன். இவரை அந்நாட்டில் உள்ள நியூயாா்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக நியமிக்க அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளாா். அவரின் பரிந்துரை அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரையை செனட் சபை உறுதி செய்யும்பட்சத்தில், நியூயாா்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றவுள்ள முதல் தெற்காசிய நீதிபதி என்ற பெருமையை அருண் சுப்ரமணியன் பெறுவாா்.

இதனிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் விடுமுறையில் சென்றுள்ளாா். இதனால் அந்த அமைச்சகத்தின் முதன்மை துணை செய்தித் தொடா்பாளராக பொறுப்பு வகிக்கும் வேதாந்த் படேல் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்து அமெரிக்க வெளியுறவு கொள்கை தொடா்பாக விளக்கமளித்தாா். இதன் மூலம் அந்தப் பணியைச் செய்த முதல் இந்திய வம்சாவளி நபா் என்ற பெருமையை வேதாந்த் படேல் பெற்றாா். அவரின் சிறப்பான பணிக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com