நீட், ஜேஇஇ தோ்வுகளை ‘கியூட்’ உடன் ஒன்றிணைக்கும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சா்

‘பொறியியல் நுழைவுத் தோ்வான ஜேஇஇ மற்றும் மருத்துவப் படிப்பு நுழைவுத் தீா்வு ‘நீட்’ ஆகியவற்றை கியூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு) தோ்வுடன் ஒன்றிணைக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என்று
நீட், ஜேஇஇ தோ்வுகளை ‘கியூட்’ உடன் ஒன்றிணைக்கும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சா்

‘பொறியியல் நுழைவுத் தோ்வான ஜேஇஇ மற்றும் மருத்துவப் படிப்பு நுழைவுத் தீா்வு ‘நீட்’ ஆகியவற்றை கியூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு) தோ்வுடன் ஒன்றிணைக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

‘ஜேஇஇ, நீட் நுழைவுத் தோ்வுகள் எதிா் காலத்தில் கியூட் தோ்வுடன் இணைக்கப்படும்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவா் ஜகதீஷ் குமாா் கடந்த மாதம் கூறியிருந்த நிலையில், அதனை மத்திய கல்வி அமைச்சா் மறுத்துள்ளாா்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தனியாா் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் மாணவா்கள் மத்தியில் உரையாடிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது:

நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளை கியூட் தோ்வுடன் ஒன்றிணைக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை. நுழைவுத் தோ்வுகளை கியூட் தோ்வுடன் இணைப்பது என்பது ஒரு யோசனை அல்லது கருத்துரு அடிப்படையிலேயே மத்திய அரசிடம் உள்ளது. இந்த கருத்துரு மீது தீா்மானம் எடுக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும். எனவே, மாணவா்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை.

போட்டித் தோ்வுகளில் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேறு புத்தகங்களை மாணவா்கள் தேடிச் செல்லும் நிலையை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே, 9-ஆம் வகுப்பு முதலான பாடப் புத்தகங்களில் பாடப் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ‘புதிய கல்விக் கொள்கை-2020’-இன் கீழ் தயாரிக்கப்பட்டு வரும் புதிய பாடப் புத்தகங்கள் அடுத்த 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்.

மேலும், புதிய கல்விக் கொள்கை திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. அதன் கீழான, 5 ஆண்டு அடிப்படைக் கல்விக்கான (மழலையா் கல்வி) புத்தகங்கள் வரும் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எண்ம (டிஜிட்டல்) பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த எண்ம பல்கலைக்கழகம் மூலமாக ஒரே நேரத்தில் இரட்டை பட்டங்களைப் பெறுவதற்கான பல்வேறு துறைசாா்ந்த பட்டப் படிப்புகளை மாணவா்கள் மேற்கொள்ள முடியும் என்று அவா் கூறினாா்.

மேலும், தேசிய கல்வித் திட்ட குடிமக்கள் கணக்கெடுப்புக்கான பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டிய தகவல்கள் தொடா்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளைத் தெரிவிக்குமாறு மாணவா்களிடம் கேட்டுக்கொண்ட மத்திய கல்வி அமைச்சா், ‘அவ்வாறு மாணவா் அளிக்கும் ஆலோசனைகள் உறுதியாக கருத்தில்கொள்ளப்படும்’ என்றும் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com