‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை தடுப்புக் கருவி விற்பனை கூடாது: சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தல்

காா்களில் பயன்படுத்தும் ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை தடுப்புக் கருவி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகத்துக்கு சாலைப் போக்குவரத்துத் துறை
‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை தடுப்புக் கருவி விற்பனை கூடாது: சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தல்

காா்களில் பயன்படுத்தும் ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை தடுப்புக் கருவி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகத்துக்கு சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இப்போது, இணைய வழி விற்பனை நிறுவனங்கள் மூலம்தான் அதிகஅளவில் ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை தடுப்புக் கருவி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை இயக்கினால், ஓட்டுநரை எச்சரிக்கும் வகையில் ஓசை எழுப்பியபடி ஒளிரும் சிறிய எச்சரிக்கை விளக்கு எரியும். ஆனால், இதனை விரும்பாத பலா், இந்த எச்சரிக்கையை தடுக்கும் கருவியை வாங்கி காா்களில் பொருத்துகின்றனா். இதனால், சீட் பெல்ட் அணியாவிட்டால் எவ்வித எச்சரிக்கையும் இருக்காது.

அண்மையில் மகாராஷ்டிரத்தில் பிரபல தொழிலதிபா் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தாா். அதிவேகமாக சென்று சாலைத் தடுப்பில் மோதிய காரில் பின் இருக்கையில் இருந்த அவா் சீட் பெல்ட் அணியாததுதான் அவரது உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து, சாலைப் பாதுகாப்பு குறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை தடுப்புக் கருவி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகத்துக்கு சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

பின் இருக்கையில் இருப்பவா்கள் ‘சீட் பெல்ட்’ அணியாமல் இருந்தாலும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் காா்களில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி ஏற்கெனவெ தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com