அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியீடு: புதிதாக 34 மருந்துகள் சேர்ப்பு

அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டுள்ளார்.
அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியீடு: புதிதாக 34 மருந்துகள் சேர்ப்பு

அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியல் 1996-ம் ஆண்டு முதல்முதலாக வகுக்கப்பட்டது. அதன் பின்னர் 2003, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. தற்போது 4வது முறையாக திருத்தம் செய்யப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பழைய பட்டியலில் இருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டு, புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டு 27 சிகிச்சைப் பிரிவுகளுக்கென மொத்தம் 384 மருந்துகள் கொண்ட பட்டியலை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

“அனைத்து தரப்பினருக்கும் குறைவான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் முக்கிய பங்காற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் மலிவான விலையில் மருந்து என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க இது வகைசெய்கிறது.

செயல்திறன், முன்னுரிமை, தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் அத்தியாவசிய மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவிண் பவார், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com