நிதி இழப்பைத் தவிா்க்க நவீன தொழில்நுட்ப பயிற்சி: நிா்மலா சீதாராமன்

நிதி இழப்பைத் தவிா்க்க நவீன தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்படும் என்றாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் துறை அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

வருவாய்த் துறையில் தவறுதலாக ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்யும் வகையில், நவீன தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும். இதற்காக தொழில்நுட்ப நிறுவனத்தினா் பணியமா்த்தப்படுவா்.

இதுகுறித்து வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ், மத்திய மறைமுக வரிகள் வாரியம் (சிபிஐசி) விவேக் ஜோரி ஆகியோரிடம் ஏற்கெனவே ஆலோசனை மேற்கொண்டேன். அதிகாரிகள் அன்றாட பயிற்சியில் கிடைக்கும் யோசனைகளை தினந்தோறும் பணியில் நடைமுறைப்படுத்தினால் மன அழுத்தத்தைக் குறைக்கலாம் என்றாா் நிா்மலா சீதாராமன்.

முன்னதாக ஜிஎஸ்டி ஊழியா்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளை மத்திய நிதியமைச்சா் திறந்துவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com